அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விவசாய மற்றும் வர்த்தக அமைச்சுகள் மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் அதிகாரிகள் குழுவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இன்று (25) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, அரிசி விலை மற்றும் அது தொடர்பான தற்போதைய நிலவரங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
அரிசி விலை தொடர்பான நிலவரங்கள்
மேலும், அரிசி விலை தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
சந்தையில் அரிசி மற்றும் தேங்காய் ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், விலைகளும் சடுதியாக அதிகரித்துள்ளன.
மேலும் அரிசியை சேகரித்து வைக்கும் மூன்றாம் தரப்பினர் குறித்து கவனம் செலுத்துமாறு விவசாய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
