அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவி்ப்பு
அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு குறுகிய கால அவகாசம் வழங்குமாறும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரச ஊழியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
முழு நாடுமே ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நுவரெலியாவில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெளிவுபடுத்தியுள்ளார்.
அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளில் சிக்கல்
அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளில் சிக்கல்கள் நிலவுவதால், அது குறித்து மீளாய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

2027 ஆம் ஆண்டில் மூன்றாவது சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளதால், அதன் பின்னர் அரச சேவையின் ஏனைய கொடுப்பனவுகளையும் வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
அரச ஊழியர்களுக்கு திருப்திகரமான வாழ்க்கையை பெற்றுக்கொடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
திறைசேரியிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ள பணம்
இதேவேளை, டித்வா அனர்த்தம் அனர்த்தத்தினால் நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீள்வதற்காக திறைசேரியிலிருந்து 50,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதற்காக எவ்வித பணமும் கடனாகப் பெறப்படவில்லை எனவும், எவ்வித பணமும் அச்சிடப்படவில்லை எனவும், திறைசேரியின் கணக்கில் 120,000 கோடி ரூபாய் இருந்ததாகவும் விளக்கமளித்துள்ளார்.
எனவே இந்த 50,000 கோடி ரூபாவை ஒதுக்க நடவடிக்கை எடுத்ததாகவும், அனர்த்தத்தினால் நாட்டுக்கு ஏற்பட்ட சேதம் சுமார் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என உலக வங்கி கணிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.