ஜனாதிபதி மாளிகையை இடமாற்றம் செய்ய தீர்மானம்
கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு பதிலாக கோட்டை பிரதேசத்தில் புதிய ஜனாதிபதி மாளிகையை அமைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகை உட்பட பல விசேட இடங்களை பயன்படுத்த தீர்மானித்ததன் பிரகாரம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, ஜனாதிபதி மாளிகையை கோட்டை பிரதேசத்தில் நிறுவவும், தற்போது கொம்பஞ்சாவீதியில் உள்ள விமானப்படை தலைமையகத்திற்கு பொலிஸ் தலைமையகத்தை கொண்டு வரவும், வெளிவிவகார அமைச்சை வேறு இடத்திற்கு மாற்றவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்பிறகு, இந்தப் பகுதியை சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan
உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்: பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி News Lankasri