சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராசாவினால் அமரர் கௌரி சங்கரின் நினைவு நூல் வெளியீடு (PHOTOS)
ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா எழுதிய கௌரி நீதியின் குரல் நினைவு நூல் வெளியீட்டு விழாவும், அமரர் சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசாவின் ஒரு வருட ஞாபகார்த்த நினைவேந்தல் நிகழ்வும் கொழும்பு, வெள்ளவத்தை குளோபல்டவர் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்விற்கு அதிதிகளாக பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, சட்டமா அதிபர் சஞ்ஜே ராஜரத்னம் உட்பட முன்னாள் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் சாகல ரத்நாயக்க, தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி.திசாநாயக்க, ராஜித சேனாரத்ன, வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் உள்ளிட்ட நீதியரசர்கள், மேல்நீதிமன்ற நீதிபதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
மேலும், இந்நிகழ்விற்கு உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ்.துரைராஜா தலைமையுரையாற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




 
                                            
                                                                                                                                     
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    சீனாவில் இருந்து அரிய பூமி கனிமங்களை இறக்குமதி செய்ய உரிமம் பெற்றுள்ள இந்திய நிறுவனங்கள் News Lankasri
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        