ஜனாதிபதி அநுர பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு
இலங்கையில் சாட்சிகளுடன் கூடிய வழக்குகளை உடனடியாக விசாரித்து முடிவுக்கு கொண்டு வருமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க, ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் உயர் சட்ட அதிகாரிகள் ஆகியோருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலின் போது, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக அவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக ஜனாதிபதி வலியுறுத்தினார்.
ஜனாதிபதி உத்தரவு
எனவே, குற்றம் செய்யும் எந்தவொரு நபரின் நிலை என்னவாக இருந்தாலும் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இங்கு, வழக்கின் தாமதத்தை பாதிக்கும் நடைமுறை சிக்கல்கள் மற்றும் வழக்கு கோப்புகள் முழுமையடையாததற்கான காரணங்கள் குறித்து சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள், ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தியுள்ளனர்.
இந்தக் கலந்துரையாடலில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, மற்றும் மூத்த அதிகாரிகள் சட்டமா அதிபருடன் கலந்து கொண்டனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

ரோஜா ரோஜா பாடல் மூலம் ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பிய பார்க்க வைத்த இளைஞன்.. யார் இவர் Cineulagam
