மகிந்தவை கைது செய்வதில் அநுர தயக்கம்! வெளியான பின்னணி
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள போதிலும் அரசாங்கத்தின் நிர்வாகக் கட்டமைப்பில் பாரியளவில் மாற்றங்கள் ஏற்படவில்லை.
இதன் காரணமாகவே, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயங்குவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் எம்.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அத்துடன், மகிந்த குடும்பத்தினரை கைது செய்து அவர்களுக்கெதிராக ஆதாரங்களை திரட்டுவதை விட ஆதாரங்களை முதலில் திரட்ட அரசாங்கம் திட்டமிட்டிருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறான சூழ்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, முடிந்தால் எங்களை கைது செய்து காட்டுங்கள் என கூறியிருந்தமையையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவை தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |