ராஜபக்சர்களை நிராகரிக்கக் கூறிய நிமல் லான்சாவை நிராகரித்த ஜனாதிபதி ரணில்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஆதரவின்றி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவேண்டும் என்று கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா (Nimal Lanza) முன்வைத்த பரிந்துரையை ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தரப்பினர் நிராகரித்துள்ளனர்.
மகிந்த, பசில், நாமல் மற்றும் சமல் ஆகிய அனைத்து ராஜபக்சக்களுடன் தொடர்பு கொள்வதை விட்டுவிடுவதே சிறந்தது என்பதோடு இதன்மூலம் ரணிலுக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என யோசனை வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
எனினும், அந்த பரிந்துரையை ரணிலும் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன மற்றும் ஜனாதிபதியின் சிரேஸ்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க ஆகியோர் நிராகரித்துள்ளனர்.

லான்சா முன்னதாக பசில் ராஜபக்சவின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவராக இருந்துள்ளதோடு ரணில் ஜனாதிபதியாக பதவியேற்றதும் ஜனாதிபதி செயலகத்தில் அலுவலக இடத்தை பெற்றுக்கொண்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 39 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு ரணிலுக்கு இருப்பதாகவும், அவர்கள் உரிய நேரத்தில் இணைந்து கொள்வார்கள் என்றும் வான்சா குறிப்பிட்டுள்ள நிலையில் அது நிறைவேறவில்லை.
இந்தநிலையிலேயே லான்சாவின் பரிந்துரையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிராகரித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri