கோட்டாவுக்கு எதிரான கொலை முயற்சி: சந்தேகநபரின் வாக்குமூல ஆவணத்தை காணவில்லை
கொழும்பு-கொள்ளுப்பிட்டி பித்தல சந்தியில் வைத்து பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை படுகொலை செய்ய முயற்சித்ததாக தொடரப்பட்ட வழக்கின் பிரதான குற்றவாளியான பொன்னுசாமி கார்த்திகேசு சிவாஜி, பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலம் அடங்கிய அசல் ஆவணம் காணாமல் போயுள்ளது.
மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில், இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது கிராண்ட்பாஸ் பொலிஸ்நிலைய விசேட புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த குற்றவாளியின் வாக்குமூல அசல் ஆவணம், மூத்த அதிகாரிகளின் பதிவு புத்தகத்தில் சட்டப்படி ஒட்டப்பட்டிருந்தது.

எனினும், அந்த வாக்குமூலத்தை ஆதாரமாக முன்வைக்க அரசுத் தரப்பு ஆயத்தமானபோது, அசல் ஆவணம் பொலிஸ் காப்பகத்தில் இல்லை என்பது தெரியவந்தது.
அசல் ஆவணப் புத்தகத்தின் குறிப்பு
இந்தநிலையில், பதிவுப் புத்தகங்கள் காலாவதியாகும்போது அவை அழிக்கப்படும் என்றும், ஆனால் அவை அழிக்கப்படுவதற்கு முன்னர், அது குறித்த குறிப்புகள் பதிவு செய்யப்படும் என்றும் கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலைய விசேட புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், குறித்த அசல் ஆவணப் புத்தகத்தின் குறிப்பு எதுவும் பொலிஸாரின் காப்பகத்தில் இல்லை என்று அவர் மன்றில் தெரிவித்தார்.
இந்தநிலையில் அரசு தரப்பில் முன்னிலையான பிரதி மன்றாடியார் நாயகம், சம்பந்தப்பட்ட பதிவு புத்தகம் தவறியுள்ளமையால்;, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசித்து நீதிமன்றத்திற்கு தெரிவிப்பதாக அறிவித்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri