ரணில் வழக்கின் போது நீதிமன்றத்தில் அனைவரையும் வியக்க வைத்த செயல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது பொது சொத்து சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, நேற்றுமுன்தினம் (28) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் மீண்டும் அந்த விடயங்கள் பேசுபொருளாகியுள்ளன.
ரணிலின் வழக்கு விசாரணைகளில் அவர் எவ்வாறு அதிகமாக பேசப்பட்டாரோ அதே அளவில் அவருக்கு எதிராக வாதாடும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸீம் அதிகமாக அறியப்பட்டார்.
அந்தவகையில் நேற்றுமுன்தினமும் அவர் வாதங்களை ஆரம்பிக்கும் போதே இந்தவிசாரணையின் முதலாவது சந்தேக நபர் எங்கெ என்று கேட்டே தனது வாதத்தை ஆரம்பித்துள்ளார்.
அப்போதே அவரை அனைவரும் வியந்து பார்க்க ரணில் தரப்பு இதோ இங்கு அமர்ந்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளனர்.
அதற்கு மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் “அமர்ந்திருக்கின்றாரா ? நீதிமன்ற நடவடிக்கைகள் எப்படி நடைபெற வேண்டும் என்று தெரியாதா? இது மரியாதையற்ற விடயம், நீதிமன்றில் யாருக்கும் சாட்சி கூண்டில் அமர முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
அப்போதே வாத பிரதிவாதங்கள் சூடுப்பிடிக்க ஆரம்பித்துள்ளது.
இந்தவிடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் News Insight தமிழ் நிகழ்ச்சி...