முக்கிய வழக்கிலிருந்து ஜனாதிபதி ரணில் நீக்கம்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை குறித்த வழக்கிலிருந்து விடுதலை செய்யுமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை கொழும்பு மாவட்ட நீதிபதி மகேஷா டி சில்வா நேற்று (01.03.2023) அறிவித்துள்ளார்.
இழப்பீடு கோரி தாக்கல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்கத் தவறியதன் காரணமாக பாதிக்கப்பட்ட 108 பேர் தங்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு கோரி தாக்கல் செய்த வழக்கின் பிரதிவாதியாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிடப்பட்டிருந்தார்.
இந்த வழக்குகள் முன்னர் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ரணில் விக்ரமசிங்க சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் பூர்வாங்க ஆட்சேபனையை முன்வைத்து, தமது கட்சிக்காரர் தற்போது ஜனாதிபதியாக இருப்பதால், அரசியலமைப்பின் கீழ் அவருக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது என சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan
உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்: பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி News Lankasri
பாக்கியராஜ் சொன்ன வார்த்தை வீட்டைவிட்டு வெளியேறிய மலர்... அழகே அழகு சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam