அதி முக்கிய வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்வதற்கு ஜனாதிபதி தீவிர ஆலோசனை
கொழும்பு நகரில் முக்கியமான சில இடங்களை அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் என அறிவித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை ஆராய்ந்து பார்க்குமாறு சட்டமா அதிபருக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள் சிலர் வழங்கிய முன்வைத்த விடயங்கள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார்.
வர்த்தமானி அறிவித்தலால் வர்த்தக செயற்பாடுகளுக்கு கடும் அழுத்தங்கள்
எனினும் இந்த வர்த்தமானி அறிவித்தல் காரணமாக கொழும்பு நகரின் கேந்திர பொருளாதார வலயத்திற்குள் வர்த்தக செயற்பாடுகளுக்கு கடும அழுத்தங்கள் ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் குழு ஒன்று ஜனாதிபதியிடம் விரிவாக விடயங்களை விளக்கி கூறியுள்ளது.
கொழும்பு நகரில் அவ்வப்போது நடக்கும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக பொருளாதார ரீதியாக ஏற்படும் பாதிப்பு மிகப் பெரியது எனவும் எனினும் அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதன் மூலம் வேறு சிக்கல்கள் ஏற்படக்கூடும் எனவும அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஜனாதிபதி நாடு திரும்பியதும் பாதுகாப்பு வலயங்களை இரத்துச் செய்யும் வர்த்தமானி வெளியாகலாம்
எவ்வாறாயினும் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்ய வேண்டுமாயின் ஜனாதிபதியே கையெழுத்திட வேண்டும். இதனால், ஜனாதிபதி ஜப்பானுக்கான விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய பின்னர், அதனை மேற்கொள்ள உள்ளதாக நம்பிக்கையான தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம் நாடாளுமன்ற வளாகம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதி,ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை,பிரதமர் அலுவலகம், அலரி மாளிகை,உயர் நீதிமன்றம் உட்பட நீதிமன்ற வளாகம்,கொழும்பு நீதவான் நீதிமன்ற வளாகம்,சட்டமா அதிபர் திணைக்களம்,இராணுவத் தலைமையகம்,விமானப்படைத் தலைமையகம்,கடற்படைத் தலைமையகம்,பாதுகாப்புச் செயலாளர் மற்றும் முப்படைத் தளபதிகளின் அலுவலகங்கள் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
May you like this Video

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 3 மணி நேரம் முன்

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
