கடுமையான தீர்மானம் எடுக்க தயாராகும் ஜனாதிபதி கோட்டாபய
எதிர்வரும் 3 வருடங்களுக்குள் கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இணைந்துக் கொண்ட ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, “எந்த தயக்கமும் இல்லாமல் கடினமான முடிவுகளை எடுத்து மக்கள், பல்வேறு அமைப்புகள் மற்றும் மஹா சங்கத்தினரால் எதிர்பார்ப்பதை ஒரு பங்கு கூட குறைக்காமல் நிறைவேற்ற நான் தயாராக இருக்கிறேன்.
இதுவரை அரசு செய்த தவறுகள் மற்றும் பிழைகளை திருத்தவும் நடவடிக்கை எடுப்பேன்.
தேர்தல் ஒன்றை எதிர்பார்த்து நான் வேலை செய்வதில்லை. நான் அந்த தீர்மானத்தை மக்களுக்கு அறிவித்துள்ளேன்” என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
மஹா சிவராத்திரி 2026 நேரலை
போர் நடந்தால் டிரம்பிற்கு இது பாடமாக இருக்கும்! அமெரிக்காவுக்கு ஈரான் தளபதி எச்சரிக்கை News Lankasri
தேவசகாயமிடம் இருந்து தப்பித்த ஜனனி, மதிவதனி.. ஆடிப்போய் இருக்கும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் 2 புரோமோ வீடியோ Cineulagam