துமிந்த சில்வாவிற்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு! முழுமை அமர்வை கோரும் ஹிருணிகா
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு வழங்கப்பட்டுள்ள ஜனாதிபதி பொது மன்னிப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றின் ஐந்து நீதியரசர்கள் அல்லது அதற்கு மேற்பட்ட நீதியரசர்களை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர மற்றும் அவரின் தாயார் சுமனா பிரமேசந்திர ஆகியோர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.
மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இராஜ் டி சில்வா சட்டக்குழுவினர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
அரசியல் அமைப்பின் 132:3ம் பிரிவின் கிழ் இந்த மனுவை விசாரிக்க ஐந்து நீதியரசர்கள் அல்லது அதற்கு மேற்பட்ட நீதியரசர்களை நியமிக்குமாறு அவர்கள் கோரியுள்ளனர்.
உயர் நீதிமன்ற நீதியரசர்களான காமினி அமரசேகர, ஏ.எச்.எம்.டி நவாஸ் மற்றும் சிரான் குணரத்ன ஆகிய நீதியரசர்கள் ஊடாக இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2022ம் மார்ச் 3ம் திகதி இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்த மனுவில் சட்டத்தின் அடிப்படையில் துமிந்த சில்வாவுக்கான ஜனாதிபதி பொது மன்னிப்பு செல்லுபடியற்றது என அறிவிக்குமாறு மனுதாரர்கள் கோரியுள்ளனர்.
அத்துடன், அவர் நாட்டை விட்டு வெளியேற இடைக்கால தடை விதிக்குமாறும், அவரது கடவுச்சீட்டை பறிமுதல் செய்யுமாறு மனுதாரர்கள் கோரியுள்ளனர். அவருக்கு வழங்கப்பட்டுள்ள பொது மன்னிப்பு தொடர்பில் ஜனாதிபதி இன்னும் விளக்கமளிக்கவில்லை.
இதேவேளை, துமிந்த சில்வாவுடன் தண்டனை பெற்ற ஏனைய குற்றவாளிகள் தொடர்ந்தும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தாம் நம்புவதாகவும் மனுதாரர்கள் கூறியுள்ளனர்.
அரசியல் அமைப்பின் 34:1 பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள மன்னிப்பு வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை ஆய்வு செய்த பின்னரே மன்னிப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே மனுதாரர்களின் வாதமாகும்.
2011ம் ஒக்டோபர் 8ம் திகதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை தொடர்பில் 2016ம் ஆண்டு செப்டம்பர் 8ம் திகதி துமிந்த சில்வா உள்ளிட்ட ஐவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது.
இந்த தண்டனையை ஆட்சேபித்து துமிந்த சில்வா உள்ளிட்டவர்கள் தாக்கல் செய்திருந்த மேன் முறையீட்டு மனுவை நீதிமன்றம் நிராகரித்திருந்தது. அத்துடன் மரண தண்டனையையும் உறுதி செய்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 5 மணி நேரம் முன்

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan
