பிரான்ஸின் செல்வாக்கை மீட்டெடுக்க ஜனாதிபதி மெக்ரோன் கிழக்கு ஆப்பிரிக்கா பயணம்
ஆப்பிரிக்கக் கண்டத்தில், குறிப்பாக மேற்கு ஆப்பிரிக்காவில் பிரான்ஸ் சந்தித்து வரும் பின்னடைவுகளைத் தொடர்ந்து, தனது நாட்டின் செல்வாக்கை மீண்டும் நிலைநிறுத்த ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
எகிப்தில் தனது பயணத்தை ஆரம்பித்த அவர், அங்கிருந்து கென்யா மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளுக்குச் செல்கிறார்.
2017ஆம் ஆண்டு அவர் பதவியேற்ற பிறகு, ஆங்கிலம் பேசும் ஆப்பிரிக்க நாடு ஒன்றில் அவர் பங்கேற்கும் முதல் மாநாடாக கென்யாவில் நடைபெறவுள்ள "ஆப்பிரிக்கா பார்வர்டு" உச்சிமாநாடு அமைகிறது.
முதலமைச்சர் விஜயின் பதவியேற்பு விழாவில் சர்ச்சையை கிளப்பியுள்ள தமிழ்தாய் வாழ்த்து! தவெக தரப்பிலிருந்து கொடுக்கப்பட்டுள்ள விளக்கம்
வணிக ஒப்பந்தங்கள்
இந்த உச்சிமாநாட்டில் பிரான்ஸ் மற்றும் கென்ய நிறுவனங்களுக்கு இடையே பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு வணிக ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

தனது பயணத்தின் இறுதிப் பகுதியாக எத்தியோப்பியா செல்லும் மெக்ரோன், அங்குள்ள ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைமையகத்தில் ஆப்பிரிக்காவின் பாதுகாப்பு மற்றும் அமைதி குறித்து ஆலோசனைகளை நடத்தவுள்ளார்.
கடந்த காலங்களில் பிரான்ஸ் தனது முன்னாள் காலனித்துவ நாடுகளில் அதிக செல்வாக்கு செலுத்தி வந்த நிலையில், சமீபகாலமாக மாலி, நைஜர் போன்ற நாடுகளில் ஏற்பட்ட இராணுவப் புரட்சிகளால் அங்கிருந்து வெளியேற வேண்டிய சூழல் உருவானது.
இந்த வெற்றிடத்தை ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகள் நிரப்பி வரும் நிலையில், காலனித்துவப் போக்கைக் கைவிட்டு, சமமான கூட்டாண்மை மற்றும் இளைஞர் மேம்பாடு ஆகிய புதிய கொள்கைகளின் அடிப்படையில் ஆப்பிரிக்க நாடுகளுடன் உறவை மேம்படுத்த மெக்ரோன் திட்டமிட்டுள்ளார்.
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam