பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி பங்கேற்ப்பு
மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் தலைமையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்றுள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள பொதுநலவாய செயலகத்தில் இந்த மாநாடு நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் மயமாக்கல்
இளைஞர் பங்கேற்பு மற்றும் கல்வி சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிப்பதில் பொதுநலவாய அமைப்பின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, டிஜிட்டல் மயமாக்கல் ஊடாக உறவுகளை வலுப்படுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கானா ஜனாதிபதியுடன் இருதரப்பு கலந்துரையாடலில் கலந்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பேராசிரியை மைத்திரி விக்ரமசிங்கவும் மாநாட்டுடன் இணைந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார்.
கணவரை பிரிந்த நிலையில் ஹன்சிகா எங்கே சென்றிருக்கிறார் பாருங்க.. அதுவும் யாருடன் தெரியுமா? Cineulagam
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri