ரணில் - ருவண்டா ஜனாதிபதி சந்திப்பு: பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து பேச்சு
மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் பங்கேற்பதற்காக உத்தியோகபூர்வ அழைப்பின்பேரில் பிரித்தானியாவுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அங்கு பல முக்கியஸ்தர்களை சந்தித்து வருகின்றார்.
அதன்படி, இன்றைய தினம் (06.05.2023) ருவண்டா ஜனாதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இச்சந்திப்பின்போது, விவசாயம், சுகாதாரம் உள்ளிட்ட பல துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்தும், அதன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இரு நாட்டு அமைச்சர்களின் சந்திப்பு குறித்தும் ஆராய்ந்துள்ளனர்.
இலங்கை பாதுகாப்பு படைகள்
மேலும், இரு நாடுகளுக்குமிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் தலைவர்கள் கவனம் செலுத்தியது மற்றும் இயற்கை அனர்த்தங்களுக்குத் துரித நடவடிக்கை எடுப்பது தொடர்பில் பயிற்சி அளிக்க இலங்கை பாதுகாப்பு படைகளின் ஒத்துழைப்பை வழங்குவதற்கு ஜனாதிபதி விக்ரமசிங்க உடன்பாடு தெரிவித்துள்ளார்.