பிரித்தானியாவின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் முடிசூடினார்(Live)
பிரித்தானியாவின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் இன்று(06.05.2023)முடிசூடினார்.
700 ஆண்டுகள் பழமையான சிம்மாசனத்தின் பின்நின்று கொண்டு கேண்டர்பரி ஆர்ச் பிஷப் மன்னர் சார்லசை அங்கீகரித்து அறிவிப்பு வெளியிட்டார்.
முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக உலக தலைவர்கள் பலர் வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்துக்கு வருகை தந்துள்ளனர்.
வரலாற்றுச் சிறப்புமிக்க பக்கிங்காம் அரண்மனையில் இருந்து வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயம் வரை முடிசூட்டு விழாவின் ஊர்வலம் இடம்பெற்றுள்ளது.
முதலாம் இணைப்பு
பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழா இன்று(06.05.2023) லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் இடம்பெறுகின்றது.
மிக பிரம்மாண்டமாக நடத்தப்படும் இந்த விழாவிற்கு ‘Operation Golden Orb’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த விழாவில் மனைவி கமீலாவுடன் பங்கேற்கும் மன்னருக்கு முடிசூட்டப்படும்.
இது இங்கிலாந்து திருச்சபையின் தலைவர் என்ற அங்கீகாரத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதுடன், இந்த உரிமை மற்றும் அதிகாரங்களை அரசருக்கு மாற்றும் நிகழ்ச்சியாகவும் இருக்கும்.
இந்த முடிசூட்டு விழாவில் உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.