ஜனாதிபதியின் வெற்றி தமிழ் மக்கள் கையில்: சாணக்கியன் திட்டவட்டம்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஆதரிக்கின்ற ஒருவர்தான் இந்த நாட்டிலே ஜனாதிபதியாக வரவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் (17.08.2024) நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
பன்முகப்படுத்தப்பட்ட நிதி
“பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இம்முறை பல அபிவிருத்தித்திட்டங்களை என்னால் மேற்கொள்ள முடிந்துள்ளது.
வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஆதரிக்கின்ற ஒருவர்தான் இந்த நாட்டிலே ஜனாதிபதியாக வரவேண்டும்.

அவ்வாறான சூழல் வருகின்றபோதுதான் தமிழ் மக்களின் அரசியல் சார்ந்த விடையங்களை முன்னெடுக்க முடியும்.
நாம் அபிவிருத்தி சார்ந்த விடையங்ககளையும் நாம் முன்னெடுக்க வேண்டும். எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில்கூட உரிமையுடன்கூடிய அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டும்.
எனவே வடக்கு கிழக்கு மக்களுக்கு நன்கு சேவை செய்பவரை நன்கு அறிந்து எமது மக்கள் தேர்வு செய்ய வேண்டும்” என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri