மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரைக்காணி தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

Batticaloa Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples President of Sri lanka
By Kumar May 20, 2026 12:43 PM GMT
Report

மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரைக்காணிக்காக 1570 ஏக்கர் நிலத்தினை மகாவலியை ஒதுக்கீடு செய்யுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட விசேட அபிவிருத்தி குழுக்கூட்டம் இன்று காலை பழைய கச்சேரி மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெற்றது.

கடந்த ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 10900 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் முன்னெடுக்கப்பட்ட 2306 வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் இந்த ஆண்டு 8625 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்

ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்

 டித்வா புயல்

இக்கூட்டத்தில் மிகவும் முக்கியமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினை தொடர்பாக முக்கியமாகப் பேசப்பட்டது.

மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரைக்காணி தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை | President Instructions Mayilathamadu Madhavan Land

இதன்போது, இந்த பிரச்சனை தொடர்பில் உரிய திணைக்கள அதிகாரிகளிடம் விடயங்களை கேட்டறிந்தார், அதனைத்தொடர்ந்து மகாவலி திணைக்களத்திடம் ஜனாதிபதியால் 1,570 ஏக்கர் நிலப்பரப்பினை உடனடியாக விடுவித்து மேய்ச்சல் தரைக்கு வழங்கும்படியும் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டார். எதிர்வரும் காலங்களில் மேய்ச்சல் தரை தொடர்பில் மேலும் தீர்க்கமான நல்ல முடிவுகளை எடுப்பதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

இதன்போது, கிராமியப் பாலங்கள், கிராமிய வீதிகள், வீட்டுத்திட்ட வேலைகள், நீர்ப்பாசன திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள், எனப் பரிபாலன சபையினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன், இவற்றுக்கான செயற்பாடுகள் எவ்வாறு காணப்படுகின்றது என்பது தொடர்பாகவும், இந்த திட்டங்களில் முன்னெடுக்கப்படுகின்ற வேலைகள் தொடர்பாகவும், மீதமுள்ள வேலைகள் தொடர்பாகவும், நிதி பெறப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து டித்வா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான இழப்பீடுகள் வழங்கும் நடைமுறைகள் பற்றியும், இழப்பீடுகள் எவ்வாறு வழங்கப்பட்டுள்ளது என்பது பற்றியும், குறிப்பாக டித்வா புயல் காரணமாக விவசாயிகள் எதிர்கொண்ட இழப்பீடுகளுக்கான நட்டஈடுகள் எவ்வாறு வழங்கப்படுகின்றது, எவ்வாறு வழங்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் தொடரும் மர்மம் - தனியார் வைத்தியசாலையின் செவிலியர் வழங்கிய வாக்குமூலம்

கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் தொடரும் மர்மம் - தனியார் வைத்தியசாலையின் செவிலியர் வழங்கிய வாக்குமூலம்

ஆரம்பிக்கப்படவுள்ள பணிகள்.. 

இதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரியளவில் முன்னெடுக்கப்படவுள்ள இரண்டு குளங்களை இணைத்து முன்னெடுக்கப்படவுள்ள முந்தனையாறு நீர்ப்பாய்ச்சல் குளம் வேலைத்திட்டம் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் அது தொடர்பான செயற்பாடுகளை விரைவாக முன்னெடுத்து அபிவிருத்தி பணியை ஆரம்பிக்கவும் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரைக்காணி தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை | President Instructions Mayilathamadu Madhavan Land

இதனைத் தொடர்ந்து, புன்னக்குடா கைத்தொழில் பேட்டைக்கான நீர்வழங்கல் விடயம், பட்டிருப்புப் பாலம் மற்றும் குருமண்வெளி தொடக்கம் மண்டூர் வரையான பாலங்களுக்கான அபிவிருத்திப் பணிகள் தொடர்பான விடயங்களும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

யானை - மனித மோதல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், யானை வேலிகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைக்க இருப்பதாகவும், சகல இடங்களுக்கும் இந்த வேலிகள் பகிர்ந்தளிக்கப்பட்டு, யானை வேலிகளை அமைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, நெல் சந்தைப்படுத்தல் சபைக்கான காரியாலயம் மட்டக்களப்பில் இல்லை எனவும், அவ்வாறான காரியாலயம் இல்லாமையினால் நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு ஊழியர்கள் சரியான முறையில் வருவதில்லை எனவும், உரிய முறையில் நெல்லைக் கொள்வனவு செய்வதில்லை எனவும் இதன்போது கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதற்கு உரிய முறையில் சிறந்த தீர்வினைப் பெற்றுத் தருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாகவும் கேட்டறிந்து, அதற்கான வேலைகளை விரைவில் ஆரம்பிப்பதாகவும், தற்போது மூன்று திட்டங்கள் வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் தேவைகள், அபிவிருத்திப் பணிகள் என்னென்ன முன்னெடுக்க வேண்டுமோ, அவற்றையும் உரிய முறையில் முன்னெடுப்பதாகவும், அபிவிருத்திப் பணிகளுக்கான நிதிகளை விரைவில் ஒதுக்குவதாகவும், பாதீட்டின் மூலம் எதிர்வரும் காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்திற்குத் தேவையான அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கான நிதிகளை ஒதுக்குவதாகவும் இந்தக் கூட்டத்தின் போது கலந்துரையாடப்பட்டது. 

மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர

மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர

ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்

ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
நன்றி நவிலல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US