என்னை போன்றவர்களால் ஜனாதிபதி நல்லவராக மாறியுள்ளார்-மகிந்த அமரவீர
தன்னை போன்ற நல்லவர்கள் சூழ்ந்து இருப்பதால், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் தற்போது நல்லவராக மாறியிருப்பதாக கமத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் அமரவீர இதனை கூறியுள்ளார்.
யோசனைகளை கேட்டு கமத்தொழிலுக்கு கூடிய ஒத்துழைப்புகளை வழங்கும் ஜனாதிபதி

தன்னை போன்ற கமத்தொழிலாளர்களை கொண்ட பிரதேசங்களை பிரதிநிதித்துப்படுத்துவோரின் யோசனைகளை ஆராய்ந்து பார்ப்பதன் காரணமாக ஜனாதிபதி நெற் பயிர் செய்கை உட்பட கமத்தொழில் துறைக்கு கூடிய ஒத்துழைப்பை வழங்கி வருகிறார் எனவும் அவர் கூறியுள்ளார்.
எங்களை போன்றவர்கள் அருகில் இல்லை என்றால் ஜனாதிபதி முன்பு போல் செயற்பட்டிருப்பார்

தம்மை போன்றவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அருகில் இருக்கவில்லை என்றால், கடந்த காலத்தில் போன்று நாட்டின் நெற் பயிர் செய்கையை கவனத்தில் கொள்ளாது வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்யும் நிலைமையேற்பட்டிருக்கும் எனவும் மகிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.
ட்ரம்பின் மிகப்பெரிய திட்டம்... ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து நான்கு நாடுகளை குறிவைக்கும் அமெரிக்கா News Lankasri
அறிவுக்கரசியால் ஜனனியின் தொழிலுக்கு ஏற்பட்ட பெரும் துயரம், எப்படி சமாளிக்க போகிறார்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri