இலங்கையில் வருகிறது புதிய சட்டம்! ஜனாதிபதி கோட்டாபய பிறப்பித்துள்ள உத்தரவு
தேர்தல்களின் போது வேட்பாளர்கள் செலவிடும் தொகையை வரையறை செய்வது குறித்த சட்ட வரைவினை தயாரிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) உத்தரவிட்டுள்ளார்.
தேர்தலின் போது மெய்யான மக்களின் பிரதிநிதித்துவம் பிரதிபலிக்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மித மிஞ்சிய அளவில் வேட்பாளர் ஒருவர் பணத்தை செலவிட்டால் மக்கள் வாக்களிக்கும் போது அது தாக்கத்தை செலுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தேர்தலின் போது வேட்பாளரின் தேர்தல் செலவுகளை வரையறுக்கும் சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் செலவுகளை வரையறுக்கும் உத்தேச சட்ட முன்மொழிவுகள் அடங்கிய அமைச்சரவை பத்திரம் கடந்த 2017ம் ஆண்டில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அண்மையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனவே தேர்தல்களின் போது வேட்பாளர்களினால் செலவிடப்படும் தொகையை வரையறுப்பதற்கு புதிய சட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |





உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
