அரசியலமைப்பு சட்டவாக்க சபையின் பதவிக்காலத்தை மேலும் மூன்று மாதங்கள் நீடிப்பு
புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க நியமிக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டவாக்க சபை, அந்த நடவடிக்கைகளை நிறைவு செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மேலும் மூன்று மாத காலம் வழங்கியுள்ளார்.
அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் பணிகளைக் கடந்த செப்டம்பர் 15 ஆம் திகதிக்குள் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி அரசியலமைப்புச் சட்டவாக்க சபைக்கு இதற்கு முன்னர் அறிவித்திருந்தார்.
எனினும் அந்த பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என்பதால், மேலும் மூன்று மாத காலம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசியலமைப்புச் சட்டவாக்க சபை, கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் வாரத்தில் சில முறை கூடி இந்த விடயம் தொடர்பாக முன்வைக்கப்படும் யோசனைகளை ஆராய்ந்து வருகிறது.
புதிய அரசியலமைப்புச் சட்டத்தின் வரைவு எதிர்வரும் நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri