ஜனாதிபதி மாளிகைகளை கமல்ஹாசனின் திரைப்படத்துடன் ஒப்பிட்ட அநுர
தென்னிந்திய நடிகர் கமல்ஹாசனின் தசாவதாரம் திரைப்படத்தை போன்று நாடு முழுவதும் பல இடங்களில் ஜனாதிபதி மாளிகைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று(31.01.2025) இடம்பெற்ற மக்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
யாழ். காங்கேசன்துறையிலும் ஒரு ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாளிகை எனக்கு வேண்டாம், உங்களுக்கு வேண்டுமா என மக்களிடம் ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.
மாற்றியமைக்கப்படவுள்ள மாளிகைகள்
அதற்கு மக்கள், தங்களுக்கும் மாளிகைக்கு வேண்டாம் என பதிலளித்தனர்.
இதனையடுத்து, குறித்த மாளிகையை பயனுள்ள விதத்தில் ஒரு பல்கலைக்கழகமாக மாற்றியமைக்க ஆலோசிப்பதாக ஜனாதிபதி உறுதியளித்தார்.
அதுமாத்திரமின்றி, நுவரெலியா, மஹியங்கனை, அனுராதபுரம் மற்றும் கதிர்காமம் ஆகிய பிரதேசங்களில் உள்ள மாளிகைகளையும் மாற்றியமைப்பேன் என அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |