ஜனாதிபதியின் பாதுகாப்புக்குச் சென்ற டிபெண்டர் விபத்து! நான்கு பேர் காயம்
ஜனாதிபதி அநுரகுமாரவின் யாழ்ப்பாண விஜயத்தின் போது பாதுகாப்புக்குச் சென்றிருந்த டிபெண்டர் வாகனமொன்று விபத்துக்குள்ளாகியதில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று(31) மாலை அநுராதபுரம்- தலாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த டிபெண்டர் வாகனம், தலாவ எரிபொருள் நிரப்பும் நிலையம் அருகே விபத்துக்குள்ளாகியுள்ளது.
பொலிஸார் விசாரணை
சாரதிக்குத் தூக்கம் ஏற்பட்டதன் காரணமாக வாகனம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
விபத்தின் காரணமாக நான்கு பேர் காயமடைந்து அநுராதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் இரண்டு பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதன் காரணமாக அவர்கள் இன்று காலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பில் தலாவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 21 மணி நேரம் முன்

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri

பாரிய முதலீடுகளால் இன்னொரு ஏழை நாட்டிற்கு வலை விரித்த சீனா... முதற்கட்டமாக ரூ 3,000 கோடி News Lankasri
