கொழும்பு துறைமுக வளாக கப்பற்துறை தடாகத்தில் விழுந்து ஒருவர் பலி
கொழும்பு துறைமுக வளாக கப்பற்துறையில், பணிபுரிந்த ஒருவர் கப்பல் பழுதுபார்க்கும் பணிக்காக பயன்படுத்தப்படும் தடாகத்தில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து நேற்று (31) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுக வளாகத்தில் உள்ள கப்பற்துறையில் துணை ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
உயிரிழந்தவர் பரகஹவிட்ட பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுழியோடிகள் மூலம் அவர் வெளியே எடுக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசாரணையில், உயிரிழந்த நபர் காலை உணவுக்கு பிறகு கைகளைக் கழுவுவதற்காக கப்பல் பழுதுபார்க்கும் பணிக்காக பயன்படுத்தப்படும் தடாகத்திற்கு சென்று திரும்பி வரும் வழியில் தடாகத்தில் விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரையோர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சுந்தரவள்ளிக்கு தெரியவந்த ரஞ்சித் பற்றிய உண்மை... மூன்று முடிச்சு பரபரப்பான சீரியல் புரொமோ Cineulagam
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri