ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதில் ரணில் உறுதி! அடுத்த வாரம் வெளியாகும் அறிவிப்பு
மக்கள் ஆணையுடனேயே ஆட்சிக்கு வரவேண்டும் என்பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) உறுதியாக இருக்கின்றார். எனவே, ஜனாதிபதித் தேர்தல் இந்த வருடம் நிச்சயம் நடைபெறும் என்று அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ(Harin Fernando) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் இப்போதைக்கு அவசியமில்லை. இரண்டு தேர்தல்களும் இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட வேண்டும். தற்போதைய ஜனாதிபதியே பதவியில் தொடர வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார(Palitha Range Bandara) கூறியுள்ளாரே?" என்று ஊடகங்களால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் ஹரின் மேற்கண்டவாறு கூறினார்.
ஜனாதிபதி தேர்தல்
அவர் மேலும் தெரிவிக்கையில்,

"அவ்வாறு இல்லை, தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் ஆசியுடன் வெற்றி பெறுவதையே ஜனாதிபதி ரணில் விரும்புகின்றார். தேர்தலில் போட்டியிடவுள்ளதை அடுத்த வாரமளவில் அவரே அறிவிப்பார். ஜனாதிபதித் தேர்தலில் அவர் களமிறங்குவதும், வெற்றி பெறுவதும் உறுதி.
ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சி பக்கம் வருவார்கள். அதற்கான நேரம் வரும். அதுவரை காத்திருப்போம். நாடாளுமன்றத் தேர்தலும் உரிய நேரத்தில் நடைபெறும். அதுவும் ஒத்திவைக்கப்படாது" என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri