ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் தொடர்பில் வெளியிடப்பட்ட தகவல்
நாடளாவிய ரீதியில் ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நாளை அதிகாலை முதல் உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ பெறுபேறுகள் அதிகாரிகளால் வழங்கப்பட்டதன் பின்னர் ஆணைக்குழுவினால் பெறுபேறுகள் வெளியிடப்படு என ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவுகள்
38 வேட்பாளர்களின் பெறுபேறுகளும் ஊடகங்களுக்கு வெளியிடப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும் அதற்கு முன்னதாக தபால் மூல வாக்களிப்பு முடிவுகளை வழங்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஊடகங்கள் போட்டித்தன்மைக்கு அமைய முன்கூட்டியே பெறுபேறுகளை வெளியிடக் கூடாது. ஆணைக்குழு வழங்கும் உத்தியோகபூர்வ முடிவுகளை மட்டுமே வெளியிடுமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri