ஜனாதிபதி தேர்தலில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது.
தேசிய மக்கள் சக்தி கட்சியின் வெற்றியை மதிப்பதாகவும், எனினும் முறைகேடுகள் குறித்து தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளி கட்சியான ஜனரஜ பெரமுன கட்சியின் தலைவர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் வாக்களிப்பு ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் இருந்து வாக்கு எண்ணப்படும் வரையில் சில அதிகாரிகள் முறைகேடாக நடந்து கொண்டதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆணைக்குழுவில் முறைப்பாடு
தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துவிட்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது சம்பிக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது சுற்று வாக்கு எண்ணப் படுவதற்கு முன் சில வாக்கெண்ணும் அதிகாரிகள் வாக்குச் சீட்டுகளில் விருப்பு வாக்குகளை பதிவு செய்துள்ளமையால் எமது வேட்பாளருக்கு அநீதி ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் முடிவுகளுக்கு அமைய 42 வீத வாக்குகளை பெற்று அநுரகுமார திசாநாயக்க வெற்றி பெற்றமைக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேவேளை, அவருக்கு எதிராக 58 வீதமான மக்கள் வாக்களித்துள்ளார் என்பதையும் அநுரகுமார நினைவில் கொள்ள வேண்டும் எனவும் சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.
அலி கமெனியின் இறுதி ஊர்வலத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் அமெரிக்கா! பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ள ஈரான்
பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார்..! தொழிற்கட்சியின் தலைமைப் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் தொடக்கம்
கோட்டாபய விரட்டப்பட்டு 4 வருடங்கள் - ஜனாதிபதி மாளிகையில் இருந்த பெறுமதியான பொருட்களை திருடியது யார்..!
மாபெரும் வெற்றியடைந்த கட்டா குஸ்தி 2... விஷ்ணு விஷாலுக்கு தயாரிப்பாளர் கொடுத்த பிரம்மாண்ட பரிசு Cineulagam
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan
மிகப்பெரிய நபரை குளிப்பாட்டி, கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ஷோபனா... வீடியோ இதோ Cineulagam
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan