அநுரவின் வெற்றி குறித்து தேசிய மக்கள் சக்தி வெளியிட்டுள்ள அறிவிப்பு
ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுக்கு அமைய அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் உறுதிப்படுத்தியுள்ளார்.
அநுரகுமார திஸாநாயக்க ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளார் எனவும், மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
1.3 மில்லியன் வாக்குகள் வித்தியாசத்தில் அநுரகுமார வெற்றி பெற்றுள்ளதாக அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அநுரவின் வெற்றி
இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்குகளை எண்ணுவது இறுதி முடிவுகளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வேட்பாளர்கள் எவரும் 50 சதவீதத்திற்கு மேல் பெறாததால், இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பத்தேர்வுகளை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
விருப்பு வாக்கு
வேட்பாளர்கள் 50 சதவீதத்திற்கு மேல் பெறத் தவறினால், இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்கு தேர்தல் சட்டத்தின்படி கணக்கிடப்பட வேண்டும்.

இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பத்தேர்வுகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது, இறுதி முடிவுகள் சில மணி நேரத்தில் அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நல்ல வசூல் வேட்டை செய்யும் விஷ்ணு விஷாலின் ஆர்யன் பட வசூல்... 5 நாளில் செய்துள்ள கலெக்ஷன்... Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri