கணக்கு வழக்கு தெரியாத ஒருவர் ஜனாதிபதியாக! - இரா.சாணக்கியன் (Photos)
ஜனாதிபதிக்கு கணக்கு பார்ப்பதற்கு தெரியாது போல் விளக்குகின்றது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் (R.Shanakiya) தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற கருப்பு பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்ட போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நேற்றைய தினம் ஜனாதிபதி அவருடைய விசேட உரையில் ஆவேசமாக பல கருத்துக்களை தெரிவித்து இருக்கின்றார்.
தனது அரசாங்கத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து 95 ரூபாய்க்கு நெல்லினை கொள்வனவு செய்வதாக தெரிவித்திருக்கின்றார்.
நான் நினைக்கின்றேன் ஜனாதிபதிக்கு கணக்கு பார்க்க தெரியாது போல் விளங்குகின்றது.
விவசாயிகளின் ஒரு கிலோ நெல்லுக்கு 95 ரூபாய் கூட கொடுத்தால் அவர்களுடைய முதலீடு கூட பெற முடியாது என்பது ஜனாதிபதிக்கு விளங்கவில்லை. கணக்கு வழக்கு தெரியாத ஒருவர் ஜனாதிபதியாக வந்தால் இந்த நிலை தான் வரும் .
அதுபோன்று அவருடைய அல்லக்கைகள் இந்த மாவட்டத்தில் இருக்கும்
அரசியல்வாதிகளுக்கு ஒரு கணக்கும் தெரியாமல் போயுள்ளது என தெரிவித்துள்ளார்.










மரண வீட்டில் அரசியல்.. 1 நாள் முன்
தொடர் தோல்வி, ஆனாலும் முயற்சியை கைவிடாத ஷங்கர்.. ரூ. 1000 கோடியில் உருவாகும் பிரம்மாண்ட படம் Cineulagam
இந்தியாவுக்கு வரும் புடின்: விமானத்தில் கொண்டு வரப்பட்ட Aurus Senat கார்! மிரட்டும் தனித்துவம் News Lankasri