மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த செக் குடியரசின் ஜனாதிபதி
செக் (Czech) குடியரசின் ஜனாதிபதி பீட்டர் பவெல் (Petr Pavel) மோட்டார் சைக்கிள் பயணம் ஒன்றின் போது காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போது அவருக்கு ஏற்பட்ட காயங்கள் தீவிரமானவை அல்ல, எனினும் குறுகிய அவதானிப்புக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்தானது ஒரு மூடிய பந்தய சுற்றுவட்டத்தில் நடந்தது என்பதால் செக் குடியரசு பொலிஸார் விபத்து குறித்து எவ்வித விசாரணையும் நடத்தவில்லை.
அதிக ஈடுபாடு
62 வயதான பவெல், 2023 மார்ச் இல் செக் குடியரசின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மோட்டார் சைக்கிள்கள் மீது அதிக ஈடுபாடு கொண்டுள்ள இவர் கடந்த ஆண்டு தலைகவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டியமைக்காக பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டியேற்பட்டது.
மேலும் பதவியேற்ற சில வாரங்களுக்குப் பின்னர் அண்டை நாடான ஜெர்மனியில் உள்ள பவேரியா மாநிலத்திற்கு மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
திறப்பு விழாவில் பெரிய பிரச்சனை.. போட்டுக்கொடுத்த ஞானம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam