பதவி விலகுவதாக கூறி நாட்டு மக்களை ஏமாற்றிய ஜனாதிபதி - தொடரும் பதற்றம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தை இதுவரை சபாநாயகருக்கு அனுப்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி சிங்கப்பூர் சென்றடைந்த பின்னர் தனது பதவி விலகல் கடிதத்தை கையளிப்பதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சபாநாயகர் இது தொடர்பில் கட்சித் தலைவர்களுக்கு அறிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டும் என நாடாளுமன்ற அலுவல்கள் குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்ட விசேட கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பதவி விலகல் கடிதத்தை இன்று (13) நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் பெற்றுக் கொள்வதாக ஜனாதிபதி நாட்டிற்கு அறிவித்ததன் பிரகாரம் ஜனாதிபதி தமக்கு தொலைபேசி மூலம் அறிவித்ததாக சபாநாயகர் குறிப்பிட்டார்.
ஆடம்பர ஹோட்டலில் தங்கியிருக்கும் ஜனாதிபதி
எவ்வாறாயினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தை இதுவரை சபாநாயகருக்கு அனுப்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இலங்கையில் இருந்து இராணுவ விமானத்தில் தப்பிச் சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மாலைதீவில் உள்ள வால்டோர்ஃப் அஸ்டோரியா மாலைதீவு இத்தாஃபுஷ் இல்லத்தில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரும் ஆடம்பர ஹோட்டலில் தங்கியிருப்பதாக உறுதிப்படுத்திபடுத்தப்பட்டுள்ளது. கடந்த 9ம் திகதி இடம்பெற்ற மக்கள் எழுச்சி போராட்டத்தை தொடர்ந்து ஜூலை 13ம் திகதி பதவி விலகுவதாக அறிவித்திருந்த ஜனாதிபதி, இதுவரையில் பதவி விலகவில்லை.
எவ்வாறாயினும், தற்போதைய நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்களை பதில் ஜனாதிபதியாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.