கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடும் பாதுகாப்பு : நாடு திரும்பினார் ஜனாதிபதி அநுர
இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் நடைபெற்ற ‘AI Impact 2026’ சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தனது உத்தியோகபூர்வ இந்தியப் பயணத்தை நிறைவு செய்து நேற்று வெள்ளிக்கிழமை இரவு நாடு திரும்பினார்.
ஜனாதிபதி தலைமையிலான இலங்கைப் பிரதிநிதிகள் குழு, நேற்று இரவு 10.04 மணியளவில் புதுடில்லியிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் UL - 196 விமானம் மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்
இந்த சர்வதேச மாநாட்டில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் எதிர்கால தாக்கம் மற்றும் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார மாற்றங்கள் குறித்து ஜனாதிபதி முக்கிய உரையாற்றினார்.

அத்துடன், இப்பயணத்தின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்களுடனும் அவர் இருதரப்பு உறவுகள் குறித்துக் கலந்துரையாடினார்.
ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினரை வரவேற்பதற்காகக் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று இரவு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.