இலங்கைக்குள் உருவாகியுள்ள சக்திவாய்ந்த நிழல் அரசு.. ஜனாதிபதியின் பரபரப்பு தகவல்
இன்றைய தினம், மத மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பல முக்கிய அரசியல் நடவடிக்கைகள் குறித்து கருத்து வெளியிட்டிருந்தார்.
அவற்றில் குறிப்பாக, சட்டப்பூர்வமான அரச இயந்திரத்துடன் இணைந்து ஒரு நிலத்தடி குற்றவியல் வலையமைப்பு உருவாகி, நாட்டின் எதிர்காலத்திற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினார்.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய ஒரு இணை அல்லது நிழல் அரசாக செயல்படும் சக்திவாய்ந்த குற்றவியல் வலையமைப்பு ஒன்று நாட்டிற்குள் உருவாகியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அரசியல் இயக்கங்களுக்கு நிதியுதவி அளித்து, உள்ளாட்சி அமைப்புகளில் பதவிகளையும் பெற்றுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தமை அரசியல் பரப்பில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இவ்விடயம் குறித்து விரிவாக ஆராய்கின்றது நியூஸ் இன்சைக்ட் நிகழ்ச்சி,