96 வீதமான இலங்கையர்களின் விருப்பம் தொடர்பில் வெளியான தகவல்
ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகவேண்டும் என 96 வீதமானவர்கள் எதிர்பார்ப்பது கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
பிரபல ஊடகம் ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில் இந்த விடயம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியும் பிரதமரும் முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் அனைத்து கட்சிகளை உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என கருத்துக்கணிப்பில் கலந்துகொண்ட பெருமளவான மக்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மூன்று வாரங்களாக பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துவருகின்றதை ஏற்று ஜனாதிபதியும் பிரதமரும் முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டுமா மட்டுப்படுத்தப்பட்ட நிபுணர்கள் அமைச்சரவையை ஏற்படுத்த வேண்டுமா என எழுப்பிய கேள்விக்கு 96 வீதமானவர்கள் ஆம் என பதிலளித்துள்ளனர்.
2.1 வீதமானவர்களே ஜனாதிபதியும் பிரதமரும் முழு அரசாங்கமும் பதவி விலககூடாது என கருத்து தெரிவித்துள்ளனர்.
உதடு, நெற்றி, காலில் கடுமையான காயம் - மொஜ்தபா கமேனி குறித்து ஈரான் அதிகாரப்பூர்வ ஒப்புதல் News Lankasri
Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan