பயங்கரவாத வன்முறைகள் நாட்டில் மீண்டும் எப்போதும் இடம்பெறாது! - ஜனாதிபதி
பயங்கரவாத வன்முறைச் சம்பவங்கள் நாட்டில் மீண்டும் எப்போதும் இடம்பெறாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ( Gotapaya Rajapaksha) தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
உலகின் அனைத்து இறைமையுடைய நாடுகளுக்கும் அவற்றின் அளவு அல்லது பலத்தை கருத்திற்கொள்ளாது நியாயமான அடிப்படையில் வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.
இலங்கையில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க இடமில்லை. சர்வதேச ரீதியில் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க புலனாய்வுத் தகவல்களை பரிமாறிக் கொள்வது அவசியமானது.
கோவிட் பெருந்தொற்று கட்டுப்பாட்டில் இலங்கை ஆக்கபூர்வமான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், கோவிட் தொற்று ஒழிப்பில் கற்றுக் கொண்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் பிராந்திய வலயத்தின் மத்திய நிலையமாக இலங்கையை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அபிவிருத்தி அடைவந்து வரும் நாடுகள் பொருளாதார நிச்சயமற்றத்தன்மைகளிலிருந்து மீள்வதற்கு சர்வதேச பொறிமுறைமையொன்று அவசியம்.
நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் முனைப்புக்களுக்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இன,மத, ஆண், பெண் என்ற எந்தவிதமான பேதங்களையும் பாராட்டாது அனைத்து இலங்கையர்களுக்கும் சுபீட்சமான எதிர்காலத்தை கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் இலக்கு எனவும், அதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பேண்தகுதன்மை என்பது இலங்கை அபிவிருத்தி கட்டமைப்பின் பிரதான அங்கமாகும். காபன் வெளியீட்டை அவசரமாக குறைக்க வேண்டியதன் தேவையை இலங்கை புரிந்து கொண்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
புத்த பெருமானின் போதனைகளுக்கு அமைய இயற்கையை பாதுகாப்பதன் பொறுப்பு எவ்வளவு முக்கியத்துமானது என்ற தெளிவு இலங்கைக்கு உண்டு என்றும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நாடாளுமன்றம், நீதிமன்றம் மற்றும் அதன் சுயாதீன நிறுவனங்கள் என்பன தங்களது கடமைகளையும், பொறுப்புக்களையும் நிறைவேற்றுவதற்கு எல்லை கடந்த அவகாசம் இருக்க வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அனைத்து மக்களின் நலன்களுக்காகவும் சட்டம், நிர்வாகம், கல்வி உள்ளிட்ட துறைகளை மறுசீரமைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நீடித்து நிலைக்கும் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு உள்நாட்டு ரீதியான பொறுப்புகூறல் முறைமையொன்றும், அர்த்தபுஷ்டியான நல்லிணக்கமும் ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76ஆவது கூட்டத்தொடரில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotapaya Rajapaksha) விசேட உரையொன்றினை ஆற்றியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76ஆவது கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமானது.
கோவிட்19 வைரஸ் தொற்றிலிருந்து நம்பிக்கையான மீட்பு, நிலைத்தன்மையை உருவாக்குதல், மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் உள்ளிட்ட விடயங்களை மையமாக கொண்டு குறித்த கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri