E.T.I நிறுவனத்தின் பணிப்பாளர்கள் நால்வருக்கு விளக்கமறியல்
ஈ.டி.ஐ நிறுவனத்தின் பணிப்பாளர்கள் நால்வரையும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈ.டி.ஐ நிறுவனத்தின் பணிப்பாளர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தினருக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.
இதனையடுத்து ஈ.டி.ஐ நிறுவனத்தின் பணிப்பாளர்களான நாலக எதிரிசிங்க, ஜீவக எதிரிசிங்க, அஞ்சலி எதிரிசிங்க மற்றும் அசங்க எதிரிசிங்க ஆகியோர் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.
13.7 மில்லியன் ரூபாய் வைப்பு பணத்தை சட்டவிரோதமாக ஏற்றுக்கொண்டமை, முறைகேடாக பயன்படுத்தியமை மற்றும் பணமோசடி ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு அமைவாகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri