2027ஆம் ஆண்டு முதல் அறிமுகமாகவுள்ள புதிய திட்டம் - நாடாளுமன்றில் அறிவிப்பு
2027ஆம் ஆண்டு முதல் பாலர் பாடசாலைகளில் புதிய தேசிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பாலர் பாடசாலை கல்வி கட்டமைப்பை முறைப்படுத்துவதற்கும், தரமான கல்வியை உறுதிப்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் (06.05.2026) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
புதிய தேசிய பாடத்திட்டம்
மேலும் தெரிவிக்கையில், 2027ஆம் ஆண்டு முதல் பாலர் பாடசாலைகளில் புதிய தேசிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
பாலர் பாடசாலைக் கல்விக்கான தேசிய கொள்கை ஒன்று உருவாக்கப்பட்டு, 2026ஆம் ஆண்டுக்குள் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தேசிய கல்வி நிறுவகம் மூலம் 2025ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய ஆரம்பகால குழந்தை பருவக் கல்வி பாடத்திட்ட கட்டமைப்பின்படி, ஆசிரியர்களுக்கான வழிகாட்டிகளும் மாதிரிச் செயற்பாட்டுக் களஞ்சியங்களும் தற்போது உருவாக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை மாகாண மட்டத்திலான ஆசிரியர்களுக்கு புதிய கட்டமைப்பை எவ்வாறு திறம்படப் பயன்படுத்துவது என்பது குறித்த பயிற்சிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த சீர்திருத்தங்கள் 2027ஆம் ஆண்டு முதல் முழுமையாக நடைமுறைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் சீரியல் மற்றும் நிகழ்ச்சி.. தேதி, நேரம் தெரியுமா? முழு விவரம் இதோ Cineulagam
எல்லா உண்மையையும் சொன்ன ஜனனிக்கு ஷாக் கொடுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam