யாழ். பேருந்து நிலையத்தை பறிக்க முயன்றால் நாடு தழுவிய போராட்டம்! தொழிற்சங்கங்கள் அதிரடி எச்சரிக்கை
யாழ்ப்பாணத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான காணியை அபகரிக்கும் நோக்குடன் யார் செயல்பட்டாலும் நாடு தழுவிய நீதியில் தொழிற்சங்கப் போராட்டத்திற்கு ஆயத்தமாக உள்ளோம் என இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
நேற்று(22) ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது தொழிற்சங்கப் பிரதிநிதி இவ்வாறு கருத்து தெரிவித்தனர்.
எமது பிரச்சனைகள்
அவர்கள் மேலும் தெரிவிக்கையில், இலங்கை போக்குவரத்து சபையானது தனித்துவமான மக்கள் சேவையை வழங்கி வருகிறது.
அவ்வாறு உள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து நிலையத்தை எம்மிடமிருந்து பறிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த முயற்சியை யார் எடுத்தாலும் அதற்கு எதிராக பாரிய தொழிற்சங்க போராட்டங்களை மேற்கொள்வதற்கு தயாராக இருக்கிறோம்.
எமது பிரச்சனைகள் தொடர்பில் கொழும்பில் இருந்து கட்சி சார்பற்ற தொழிற்சங்க பிரதிநிதிகள் எம்மோடு கைகோத்திருக்கிறார்கள்.
ஆகவே இலங்கை போக்குவரத்து சபையின் தனித்துவத்தை யார் சவாலுக்கு உட்படுத்த முயன்றாலும் எமது போராட்டம் நாடளாவிய ரீதியில் நடைபெறுவதை தடுக்க முடியாது என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
ரஷ்யாவின் தவறான கணிப்பு மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கலாம் - பிரித்தானிய உளவுத்துறை எச்சரிக்கை News Lankasri
நாணயம் சுண்டி தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்: அமெரிக்க உள்ளாட்சித் தேர்தலில் சுவாரஸ்யம் News Lankasri