அமைச்சரவைக்கு ஜனாதிபதி ரணில் வழங்கியுள்ள முக்கிய பணிப்புரை
ஜனாதிபதித் தேர்தல் இந்த வருடத்தில் நிச்சயம் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர (Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.
அத்துடன், 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக ஜனாதிபதி தேர்தலுக்கு மாத்திரமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல்
இதேவேளை, நாடாளுமன்றத் தேர்தல்கள் மற்றும் ஏனைய தேர்தல்கள் தொடர்பில் பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன.
எனினும், அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்த பின்னரே வேறு எந்த தேர்தலையும் நடத்த முடியும் என ஜனாதிபதி விக்ரமசிங்க உறுதியளித்ததாக அமைச்சர் அமரவீர தெரிவித்துள்ளார்.
எனவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகுமாறு அனைவரையும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டதாக அமைச்சர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

இந்தியாவின் தக்க பதிலடி... துருக்கி, அஜர்பைஜானுக்கு பறக்கும் பாகிஸ்தான் பிரதமர்: அவரது திட்டம் இதுதான் News Lankasri
