தந்தை ஒருவரால் மகளுக்கு நேர்ந்த துயரம்
பதுளை(Badulla) - பசறை வெல்கொல்ல பிரதேசத்தில் தனது பத்து வயது மகளை தவறாக செயற்பாட்டிற்கு உட்படுத்திய தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று(22.07.2024) இடம்பெற்றுள்ளது.
பசறை வெல்கொல்ல பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது நடவடிக்கை
சம்பவத்தில், பாதிக்கப்பட்ட சிறுமியின் நடத்தையில் கடந்த இரண்டு மூன்று தினங்களாக மாற்றங்கள் காணப்பட்டுள்ளன.
மாற்றம் குறித்து சிறுமியின் தாயார் கேட்டபோது, கடந்த 19ஆம் திகதி தாய் வயல் வேலைக்குச் சென்ற போது தந்தையால் தனக்கு நேர்ந்த கொடுமை தொடர்பாக சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, சிறுமியின் தாய் பசறை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் படி, சந்தேகநபரான தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன்போது, பாதிக்கப்பட்ட சிறுமி பசறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வைத்திய பரிசோதனைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், கைது செய்யப்பட்ட சந்தேக நபரான சிறுமியின் தந்தை பசறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam