மரண சான்றிதழ் வழங்க விழா எடுக்கும் அரசு:கவலை தெரிவிக்கும் முன்னாள் எம்.பி
'டிட்வா' பேரிடரில் மரணமடைந்தவர்களுக்கான சான்றிதழ் வழங்குவதற்கு அரசாங்கம் விழா எடுக்கப்போவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி தொலவத்த தெரிவித்துள்ளார். தனது வீட்டில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர்,
வாக்குகளுக்கு அரசியல் செய்யும் அரசு
மரண சான்றிதழை பெற்றுக் கொள்பவர்கள், அதை சமர்ப்பித்து 50 ஆயிரம் ரூபாவை பெற்றுக் கொள்ளலாம்.அதனால்,மரணச் சான்றிதழ் வழங்குவதற்கும் பெரும் விழா எடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதை நாங்கள் வன்மையாக கண்டிப்பதோடு கவலையையும் தெரிவித்துக் கொள்கிறோம்.அது மட்டுமல்ல இலவசமாக வழங்கப்படும் உணவு பார்சல்களுக்கும் கூப்பன் வழங்கப்படுகிறது.

அதை வைத்துத் தான் உணவு பார்சல்களை பெற்றுக் கொள்ள வேண்டும். மரணச் சான்றிதழை பெற்றுக் கொள்பவர்கள் உங்களுக்கு வாக்களிக்கலாம்.ஆனால் அவரின் இழப்பு 50 ஆயிரம் ரூபாவில் ஈடுசெய்ய முடியாது.
இந்த அரசாங்கத்தின் சிந்தனைகள் மிகவும் கீழ்தரமானதாகவே இருக்கிறது.அவ்வாறு செய்ய வேண்டாம் என அரசாங்கத்தை கேட்டுக் கொள்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 31 நிமிடங்கள் முன்
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri