இலங்கை தமிழ் பிரதிநிதிகளிடம் விடுதலைப்புலிகளின் தலைவரை நினைவு கூர்ந்த பிரேமலதா
மறைந்த தே.மு.தி.க தலைவரும், தமிழ்த் திரை உலகின் முன்னணி நடிகருமான விஜயகாந்தின் இல்லத்திற்குச் சென்று தமிழ் பிரதிநிதிகள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள தே.மு.தி.க தலைமை அலுவலகத்தில் உள்ள மறைந்த விஜயகாந்தின் நினைவிடத்திற்கு சென்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சரவணபவன், சிவாஜிலிங்கம் மற்றும் சென்னையில் வசித்துவரும் இலங்கையைச் சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் ஆகியோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இதன்போது தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பில் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா தமது நினைவுகளை பகிர்ந்துக்கொண்டுள்ளார்.
தமிழ் மக்களின் உரிமை
இதன்போது விஜயகாந்தின் மனைவி பிரேமலதா ”தலைவர் பிரபாகரன் மீது தனது கணவர் கொண்டிருந்த அன்பின் வெளிப்பாடாகவே தமது மகனுக்கு பிரபாகரன் எனப் பெயர் வைத்தார் என்றும், தமிழ் மக்கள் தமது உரிமைகளை வென்றெடுத்து தம்மைத் தாமே ஆளுகின்ற மக்களாக வாழ வேண்டும் என்பதிலும் தனது கணவர் உறுதியாக இருந்துள்ளார்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சந்திப்புக்கான ஏற்பாடுகளை திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னோடிகளில் ஒருவரான காமாட்சி நாயுடு மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 52 நிமிடங்கள் முன்

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
