அவுஸ்திரேலிய நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் ஓய்வு
அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவிட் வார்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
சிட்னியில் நடைபெற்ற அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று (06.01.2024) நிறைவடைந்த நிலையிலேயே அவர் தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை நிறைவு செய்துள்ளார்.
போட்டியின் நான்காம் நாளான இன்று டேவிட் வார்னர் 57 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், சஜீட் கான் வீசிய பந்தில் ஆட்டமிழந்துள்ளார்.
அதேவேளை, இன்றைய போட்டியில் அவுஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியுள்ளது.
டெஸ்ட் ஓட்டங்கள்
இந்நிலையில் வார்னர் தனது இறுதி சர்வதேச போட்டியில் ஆட்டமிழந்து வெளியேறும் போது, வீரர்கள் உட்பட பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி அவருக்கு கௌரவமளித்துள்ளனர்.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 2011ஆம் ஆண்டு அறிமுகமான டேவிட் வார்னர், 112 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 26 சதங்கள், 37 அரைச் சதங்களுடன் 8786 ஓட்டங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam