கைது செய்யப்பட்ட முன்னாள் எம்.பி! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
புதிய இணைப்பு
நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இரத்தினபுரி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜெயசேகர இன்று (22) நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
நீதிபதி புஷ்பிக ஜெயதாச முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. இதன்போது, சந்தேகநபரை ரூ. 10 லட்சம் தனிநபர் பிணையிலும், ரூ. 25,000 ரொக்கப் பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், சந்தேகநபருக்கு வெளிநாட்டு பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. அவரின் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பான துப்பாக்கியை வழக்குப் பொருளாக நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
பயணத் தடை
இந்த வழக்கு செப்டம்பர் 14 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபருக்கு எதிராக, ஆயுதம் காட்டி மிரட்டல் மற்றும் கொலை மிரட்டல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இது 1996 ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட துப்பாக்கிகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபருக்காக முன்னிலையான வழக்கறிஞர்கள், அவர் எந்த குற்றமும் செய்யவில்லை என நீதிமன்றத்தில் தெரிவித்தனர். அவரை பிணை நிபந்தனைகளின் பேரில் விடுவிக்க கோரியும் வாதிட்டனர்.
மறுபுறம், பொலிஸார் விசாரணை இன்னும் நிறைவடையவில்லை என தெரிவித்து, பிணை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிபதி, சாட்சிகள் அல்லது புகார்தாரருக்கு மீண்டும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டால், பிணை ரத்து செய்யப்படும் என எச்சரித்தார். அத்தகைய சூழலில், சந்தேகநபர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்படுவார் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
மேலதிக தகவல்-திவாகரன்
முதலாம் இணைப்பு
கைது செய்யப்பட்ட முன்னாள் இரத்தினபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜெயசேகர, இன்று (22) நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
துப்பாக்கியைக் காட்டி ஒருவரை மிரட்டியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், பிரேமலால் ஜெயசேகர நேற்று(21) நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
சந்தேகத்தின் பேரில் கைது
குடும்ப உறுப்பினர்களுடன் நுவரெலியாவுக்கு வந்திருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கும், அவிசாவெல்லாவிலிருந்து சுற்றுலா வந்திருந்த ஒரு குழுவினருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நிலைமை மோசமடைந்ததாகவும், அப்போது சந்தேக நபர் தனது கைவசம் இருந்த கைத்துப்பாக்கியைக் காட்டி குழுவினரை மிரட்டியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பெறப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், நுவரெலியா பொலிஸ் அதிகாரிகள் அவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.
சந்தேக நபரிடம் இருந்த துப்பாக்கியானது, பாதுகாப்பு அமைச்சகத்தால் வழங்கப்பட்டு, 2025-ல் காலாவதியாகிவிட்ட உரிமத்தின் கீழ் வழங்கப்பட்டது என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.



அந்த கடையை கொண்டுபோய் சுடுகாடு பக்கத்துல வைங்க.. CM விஜய்க்கு நடிகர் பார்த்திபன் கொடுத்த ஐடியா Cineulagam
பூசத்தில் குரு பெயர்ச்சி ... அடுத்த 6 மாதங்கள் இந்த ராசியினரின் நிதி நிலையில் அசுர வளர்ச்சி உறுதி! Manithan
Checkup சென்ற மயிலுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி, என்ன நடந்தது... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam