யாழில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முன்னாயத்த செயலமர்வு
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக வாக்குப்பெட்டி விநியோகித்தல் மற்றும் கையேற்றல் கடமையில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கான செயலமர்வொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த செயலமர்வானது, இன்றைய தினம்(18) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபனின் தலைமையில் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல்
இந்த செயலமர்வில் கருத்துத் தெரிவித்த தெரிவத்தாட்சி அலுவலர்,
“எதிர்வரும 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்கெண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் 41 நிலையங்களானது 511 வாக்களிப்பு நிலையங்களுக்கும் வாக்குப் பெட்டிகளையும் வாக்குச்சீட்டுகளையும் அதற்குரிய இதர ஆவணங்களையும் விநியோகிக்கும் மற்றும் கையேற்கும் நிலையமாக செயற்படவுள்ளது.
அத்துடன், அந்த நிலையங்களுக்கு உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களாகவும் மற்றும் சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களாகவும் நியமிக்கப்பட்ட அலுவலகர்களின் பங்களிப்பானது காத்திரமானது.

மேலும், எதிர்வரும் 20ஆம் திகதி காலை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலிருந்து வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லும் சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கு உரிய வகையில் வாக்குப் பெட்டிகளையும் வாக்குச் சீட்டுக்களையும் இதர ஆவணங்கள் கையளிக்கப்படும்.
இதேவேளை, 21ஆம் திகதி வாக்களிப்பு நிறைவடைந்த பின்னர் சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவர்களால் கையளிக்கப்படவுள்ள வாக்குப் பெட்டிகளையும் இதர ஆவணங்களையும் உரிய வகையில் பெற்றுக்கொள்வதில் மிக வினைத்திறனாக செயற்பட வேண்டும்.” என அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த தேர்தல் சிறப்பாக அமைய அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டு நீதியாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடைபெற ஒத்துழைப்பினை நல்குமாறு தெரிவத்தாட்சி அலுவலர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், இந்த செயலமர்வில் உதவித் தேர்தல்கள் ஆணையாளர் இ.கி.அமல்ராஜினால்வாக்குப்பெட்டி விநியோகித்தல் மற்றும் கையேற்றல் கடமைகளில் ஈடுபடவுள்ள உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.



Bigg Boss 10: பாத்ரூமில் டிடிஎஃப் வாசன் செய்த திருட்டுத்தனம்! தெரியாமல் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள் Manithan
இந்தியா உட்பட பல சர்வதேச மாணவர்களின் admission offer-களை திரும்பப்பெறும் பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் News Lankasri
Mad Max திரைப்பட பாணியில்... சவுதி ஆதரவுப் படைகளும் ஹவுதிகளும் பாலைவனத்தில் நேருக்கு நேர் News Lankasri