ஐ.சி.சி பிரதிநிதிகள் பாகிஸ்தான் விஜயம்
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பிரதிநிதிகள் பாகிஸ்தானுக்கு விசேட விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரை நடத்துவது தொடர்பில் இந்த விஜயத்தின் போது கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
கராச்சியில் அமைந்துள்ள மைதானம் எவ்வாறு புணரமைக்கப்படுகின்றது என்பது குறித்து பிரதிநிதிகள் கவனம் செலுத்துவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
கிரிக்கெட் பேரவை பிரதிநிதிகள்
குறிப்பாக பாதுகாப்பு மற்றும் நிர்வாக விவகாரங்கள் எவ்வாறு கையாளப்பட உள்ளது என்பது குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவை பிரதிநிதிகள் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ராவில்பின்டி, கராச்சி, லாகூர் போன்ற பல்வேறு நகரங்களில் அமைந்துள்ள மைதானங்கள் அவற்றின் பாதுகாப்பு நிலமைகள் போட்டி ஏற்பாடுகள், ஆடுகளம் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து இந்த பிரதிநிதிகள் ஆய்வு செய்வார்கள் எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |