பைடன் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாகவேண்டும்: விரும்பம் தெரிவிக்கும் ரஷ்யா
அமெரிக்காவில் இரண்டாவது தடவையாக டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாவதை விட ஜோ பைடன் வருவதையே ரஷ்யா விரும்பும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த புடின்,
''பைடன் நீண்ட அனுபவம் உடையவர் மட்டுமல்ல, அவர் நடவடிக்கைகளை எளிதில் யூகிக்க கூடியவை. அவர் கடந்தகாலத்து அரசியல் சிந்தனைகள் மற்றும் நடவடிக்கைகளை கொண்டவர்.
அமெரிக்காவில் யார் ஜனாதிபதி
ஆனால், டொனால்ட் டிரம்ப் அவ்வாறு அல்ல. டிரம்பை பிறரால் புரிந்து கொள்ளவோ அல்லது அவரது நடவடிக்கைகளை யூகிக்கவோ முடியாது.
இருப்பினும், அமெரிக்காவில் யார் ஜனாதிபதியாக பதவி ஏற்றாலும் அவர்களுடன் ரஷ்யா இணைந்து பணியாற்றும். நேட்டோவில் அமெரிக்காவின் ஈடுபாடு குறித்து டிரம்ப் கொண்டிருக்கும் சிந்தனைகளில் நியாயம் உள்ளது.
ஆனால், முடிவு செய்ய வேண்டியது அமெரிக்காவின் பொறுப்பு. மேலும், பைடனின் உடல்நலம் குறித்து கருத்து தெரிவிக்க நான் வைத்தியர் அல்ல.
அவரது உடலாரோக்கியம் குறித்து நான் பேசுவது முறையாக இருக்காது. அத்தோடு 2021ஆம் சுவிட்சர்லாந்து நாட்டில் பைடனை நான் சந்தித்த போது அவர் நலமாகத்தான் இருந்தார்." என்றார்.
You may like this,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |