நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்ய வேண்டும்! மகிந்த
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ரத்து செய்யப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாட்டின் அரசியல் சூழ்நிலை நன்றாக இருப்பதாகவும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை தாம் ஏற்கனவே அனுபவித்துவிட்டதாகவும் அதனால் அதனை ரத்து செய்ய வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
அரசியல் சூழ்நிலை
ஒட்டுமொத்த நாடே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்யுமாறு கோரி வருவதாக தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலை ஒத்தி வைக்கும் முயற்சியானது எதிர்க்கட்சியை சிக்க வைக்கும் ஓர் திட்டமாகவும் இருக்கலாம்.
இரு தரப்பு உறவு
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யார் என்பது தமக்கு நன்றாக தெரியும் என ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு தேர்தல் நடத்தப்பட்டாலும் தமது வேட்பாளர் வெற்றியீட்டுவார் எனவும் சரியான தருணத்தில் வேட்பாளர் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்தியா போன்ற நாடுகளுடன் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜே.வி.பி புரிந்து கொண்டுள்ளமை மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.