அமெரிக்காவில் இந்திய வம்சாவளி நபர் சுட்டுக்கொலை
அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள ஷெப்பீல்ட் பகுதியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நபரொருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்திய வம்சாவளி நபரான பிரவீன் ராவோஜிபாய் பட்டேல் (வயது 76) உணவகம் ஒன்றை நடத்தி வந்த நிலையில், அங்கு தங்குவதற்காக வந்த நபருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது இந்திய வம்சாவளியினர் மீது இரண்டு முறை துப்பாக்கிச்சூடு மேற்கொண்டு அங்கிருந்து சந்தேகநபர் தப்பியோடியுள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த பிரவீன் பட்டேல், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்திய - அமெரிக்கர்கள் மீதான தாக்குதல்
இது தொடர்பாக விசாரணை நடத்திய ஷெப்பீல்ட் பொலிஸார், சந்தேகநபரை கைது செய்துள்ளதுடன், அவர் பயன்படுத்திய துப்பாக்கியையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த கொலை சம்பவத்திற்கு அமெரிக்காவில் உள்ள 'ஆசிய அமெரிக்க உணவக உரிமையாளர்கள் சங்கம்' கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக இந்திய-அமெரிக்கர்கள் மீதான தாக்குதல் மற்றும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Viral Video: நிலநடுக்கத்தால் குலுங்கிய வீடு... தம்பியை தரதரவென இழுத்துக் கொண்டு ஓடிய சிறுவன் Manithan

துபாயில் இந்தியர்களை வாளால் வெட்டிக்கொன்ற பாகிஸ்தானியர்: அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள் News Lankasri

என்ன கொடுமை இது, நான் சீரியல் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.. எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் புலம்பல் Cineulagam
